Latest News

January 11, 2012

பொங்கல் கொண்டாட ஏழை மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு-விஜய்காந்த்
by admin - 1

ஏழை, எளிய மக்கள் பொங்கல் கொண்டாடும் வகையில் தேமுதிக சார்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் அறிவித்துள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தேமுதிக, சார்பில் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். மக்களிடையே பிளவு மனப்பான்மை மறைந்து, ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு வாழும் உணர்வை ஏற்படுத்தவே, இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பணக்காரர்களுக்கு விழா எடுப்பதும், பண்டிகை கொண்டாடுவதும் எளிதாகும். ஆனால், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போதுமான வருமானம் இல்லாதவர்களுக்கு, பண்டிகை வந்தால் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் செலவிற்கு எங்கே போவது என்ற வருத்தமும் ஏற்படுகிறது.

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கே என்பதை பறைசாற்றும் வகையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில், வரும் 13ம் தேதி, பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது

இந்த விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரிப் பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள் ஆகியவை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »

1 comment

பொ.முருகன் said...

//ஏழை, எளிய மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரிப் பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள் ஆகியவை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.//

இதனால் அறியப்படுவது யாதெனில்,ஏழைகள்,பிச்சைக்காரர்களாக, தரம் இறக்கப்படுகிறார்கள்.பசித்தவனுக்கு உணவை தானமாக கொடுப்பதை விட,உணவை சுயமாக உழைத்து பெற வழி வகை செய்பவனே உண்மையான அரசியல்வாதி,மற்றவநெல்லாம் ஒட்டு பொறுக்கிகள்.