Latest News

January 27, 2012

விரைவில் மோதவுள்ள ஐபோன் 5 மற்றும் செம்சுங் கெலக்ஸி III! _
by admin - 0


செம்சுங் கெலக்ஸி வரிசையில் வெளியாகிய கையடக்கத்தொலைபேசிகள் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக கெலக்ஸி மற்றும் கெலக்ஸி II ஆகியன விற்பனையில் சாதனை படைத்தன.

கெலக்ஸி II கடந்த வருடத்தின் மிகச் சிறந்த ஸ்மார்ட் போன் ஆகவும் தெரிவாகியது.

கெலக்ஸி I , கெலக்ஸி II ஆகியன செம்சுங் நிறுவனத்தால் இதுவரை வெளியாகிய ஸ்மார்ட் போன்களில் மிகச் சிறந்ததாகவும் வர்ணிக்கப்பட்டன.

கடந்த வருடம் வெளியாகிய அப்பிளின் ஐ போன் 4S இன் விற்பனையையும் கெலக்ஸி II முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செம்சுங் ஸ்மார்ட் போன்கள் மற்றையவற்றை விட சிறந்ததாக சந்தையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இவற்றின் வருகையை அடுத்தே.

இந்நிலையில் செம்சுங் கெலக்ஸி III ஸ்மார்ட் போனையும் விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது ஸ்பெயினில் நடைபெறவுள்ள 'Mobile World Congress' நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

செம்சுங் கெலக்ஸி III ஆனது டுவல் கோர் மற்றும் குவாட் கோர் புரசசர்களைக் கொண்டதாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனோடு 12 மெகா பிக்ஸல் கெமரா, 4.5 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட (1,280x720 pixels) தொடுதிரை, 2 ஜிபி ரெம், 64 ஜிபி உள்ளக நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 'சைரி' போன்ற விசேட வசதிகள் மூலம் தனது தனி வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனம் ஐ போன் 5 ஸ்மார்ட் போனை இரகசியமாகத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது.

சீனாவில் உள்ள பொக்ஸ் கோன் எனப்படும் ஐ போன் தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இத்தகவல்களைக் கசிய விட்டுள்ளார்.

ஐ போன் 4 S ஐ விட பெரிய திரையை அதாவது 4 அங்குலத் திரையைக்கொண்டிருக்குமெனவும் தெரியவருகின்றது,

எனினும் சுமார் 4 முதல் 6 வரையான மாதிரிகள் தற்போது தயாரிப்பில் உள்ளதாகவும் அதில் எது இறுதியாகத் தெரிவு செய்யப்படுமென கூறமுடியாமல் உள்ளதாக அவ் ஊழியர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐ போன் 4 அல்லது ஐ போன் 4 S இன் தோற்றத்தினைக் கொண்டிருக்காது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது.

இதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இது இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் செம்சுங் கெலக்ஸி III மற்றும் ஐ போன் 5 இரண்டும் கூடிய விரைவில் சந்தையில் மோதப் போவது தற்போதே உறுதியாகிவிட்டது
« PREV
NEXT »

No comments