Latest News

January 10, 2012

21.12.2012 உலக அழிவு உறுதியாகியது?
by admin - 3

மாயன் நாட்காட்டியில் உலகத்தின் முடிவுநாள் 21.12.2012 எனக் காட்டுகிறது என ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜீன் பிராங்கோய்ஸ் தெரிவித்தார்.
இதுவரை உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதாக பலரும் ஆரூடம் சொல்லியுள்ளனர். சிலர் இந்தப் பேரழிவுக்குப் போர், சுனாமி, அணுசக்தி, விண்ணிலிருந்து எரிகற்கள் விழுதல், உயிர்கொல்லி நோய் என்று பல காரணங்களையும் எடுத்துரைத்தனர்.

அண்மையில் 11.11.11 அன்று எகிப்திய அதிகாரிகள் பிரமிடுகளின் வாயில்களை அடைத்து விட்டனர்.



ஏனெனில் மறு உலகத்திற்கு பாதை தேடும் சமயச் சடங்குகளை இந்தப் பிரமிடுகளுக்குள் சென்று பலரும் செய்யக் கூடும் என்ற அச்சத்தினால் அதிகாரிகள் பிரமிடுகளைப் பாதுகாத்தனர்.

இப்போது 2012ஆம் ஆண்டில் சூரியன் வடகோடியில் இருக்கும் நாளான 21.12.2012 அன்று உலகம் அழியும் என்கின்றனர். அன்று சுக்கிரனும்,

சூரியனும் நமது நட்சத்திர மண்டலத்தின் நடுவில் காணப்படுமாதலால் அன்று உலகம் அழிவது உறுதி என்று நம்புகின்றனர்.

வானவியல் மற்றும் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற மாயன் நாகரீகம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இந்த நாட்காட்டியின் கடைசி நாளாக 21.12.2012 இருப்பதனால இந்தப் பூமியின் இயக்கம் அன்றுடன் முடிந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

« PREV
NEXT »

3 comments

Unknown said...

அழிவாம் அழிவு என்னை அழிக்க எவனடா ?

admin said...

உங்களை யாராலும் அழிக்க முடியாது hahaha...............

Unknown said...

ulagam oru nalum aliyathu