Latest News

December 19, 2011

கடலுக்குச் சென்ற முல்லை மீனவர்கள் அறுவர் மாயம்! பயணித்த படகு கரையொதுங்கியது!
by admin - 0

கடற்றொழிலுக்காக நேற்றுக் காலை கடலுக்குச் சென்ற முல்லைத்தீவுப் பகுதியைச் சோ்ந்த ஆறு மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் நேற்று வானிலை அசாதாரணமாக காணப்பட்டது. கடும்காற்று, மழை என்பன காரணமாக வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக கொந்தளிப்புடன் இருந்தது. இந்த நிலையில் நேற்றுக் காலை தொழிலுக்குப் புறப்பட்டுச் சென்ற மீனவர்கள் திரும்பி வரவில்லை.

அசாதாரண வானிலை காரணமாக மீனவர்களை தேடிக் கண்டறியும் முயற்சியும் கைகூட வில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நள்ளிரவு வேளை மீனவர்கள் சென்ற படகு மட்டும் கரை ஒதுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments