Latest News

December 15, 2011

முல்லைப்பெரியாறு பிரச்சினையால் விவசாயம் பாதிப்பு
by admin - 0

முல்லைபெரியாறு அணையின் நீர்த்தேக்க மட்டத்தினை உடனடியாக 120 அடியாக குறைக்க வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில், கம்பம் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் வேகம் சற்றே தணிந்துள்ளன.
கேரள அரசியல் கட்சிகளும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஆர்ப்பாட்டங்களை ஒத்திவைக்க இசைந்துள்ளன.
இருமாநில மக்களிடையே பெரிதாக மோதல்கள் ஏதும் நிகழ்ந்துவிடாது என்பதே இன்றைய நிலை.
ஆயினும் இரு தரப்பினருமே தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள்.தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுவிடும் என்று அஞ்சி கலவரமடைந்து நாள்தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில், தமிழ்நாடே சகாரா பாலைவனமாகிவிடக் கூடும் என திமுக தலைவர் கருணாநிதி கூட அச்சம் வெளியிட்டிருந்தார்.
அப்படி ஏதேனும் நடந்துவிடக் கூடும் என உண்மையிலேயே மக்களும் நம்பினர்.
ஆனால் இப்படியாக எழுந்த அச்சங்களுக்கு அப்பால் இன்றைய நிலையில் கம்பம் பகுதி செழிப்பாகவே இருக்கிறது. முல்லைபெரியாறு பாசனத்தால் முழுப்பயனைப் பெறுகிறது அப்பகுதி.
அணை பலவீனமாகிவிட்டது எனக் காரணங்கள் கூறி நீர்த்தேக்கத்தின் அளவினை குறைக்க வேண்டுமென்று கேரள அரசு வற்புறுத்தியன் பின்னணியில் 155 அடியிலிருந்து 136 அடியாக முப்பது ஆண்டுகளுக்கு முன் குறைத்து அணை பழுதுபார்க்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவுற்று பத்தாண்டுகள் கடந்தும், நீர்த்தேக்க அளவை உயர்த்த கேரள அரசு ஒப்புக்கொள்ளவில்லை.இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முல்லைபெரியாறு அணைல் நீட்மட்டத்தின் அளவை 155 அடியிலிருந்து 136 ஆக குறைத்ததால் கம்பம் பகுதியில் பாதிப்பு ஏற்படவில்லை.
மாறாக மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அண்டையிலுள்ள சிவகங்கை பகுதிதான் பாதிக்கப்பட்டுள்ளது.
இரு தசாபத்தங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மக்களின் நிலை குறித்து ஆராய்கிறார் தமிழோசையின் சென்னை செய்தியாளர் த. நா. கோபாலன்
« PREV
NEXT »

No comments