Latest News

December 21, 2011

வட கொரிய தலைவர் இறந்தது, இவர்கள் சொல்லும் இடத்திலும், விதத்திலும் அல்ல!
by admin - 0

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-இல் இறந்த விவகாரம் தொடர்பில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகிய தென் கொரிய உளவுத்துறையின் தலைவர், இப்போது தமக்கு என்ன தெரியும் என்பதைச் சொல்ல வாய் திறந்திருக்கிறார்.அவர் சொல்வதன்படி, வட கொரிய ஜனாதிபதி இறந்தது ட்ரெயினில் அல்ல!

தென் கொரிய தேசிய உளவுத்துறை (National Intelligence Service – NIS) வட கொரிய ஜனாதிபதியின் நடமாட்டங்களை கண்காணிக்க எரவுன்ட்-தி-க்ளாக் ஏற்பாடுகளைச் செய்திருந்து என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், “நாம் அவரது நடமாட்டங்களை கடந்த வியாழக்கிழமைவரை கண்காணித்து வந்தோம்.

வெள்ளிக்கிழமை காலையில் இருந்து அவரை ட்ராக் பண்ண முடியவில்லை.

மறுபடியும் சனிக்கிழமை காலை அவர் (வட கொரிய ஜனாதிபதி) வெளியே செல்வதற்கான ஏற்பாடுகள் அவரது மாளிகையில் செய்யப்பட்டன என்தை நாம் அறிந்திருந்தோம். ஆனால், அந்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் சனிக்கிழமை அவர் மாளிகையை விட்டு வெளியேறவில்லை. மரணமடைந்து விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

தென் கொரிய உளவுத்துறையின் தலைவர் தனது தரப்பை நியாயப்படுத்த, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-யையும் வீதிக்கு இழுத்திருப்பதுதான் சி.ஐ.ஏ.-யே எதிர்பார்த்திராத திருப்பம்.

“நாங்கள் மாத்திரமா.. சி.ஐ.ஏ.-யும் தமது உளவு சட்டலைட் மூலம் வட கொரிய ஜனாதிபதியை 24 மணிநேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது உளவு திரட்டல் மூலமும் முக்கிய விஷயம் ஒன்றை அறிந்து கொண்டேன்”

அப்படி என்னதான் தெரிந்து கொண்டாராம்? இதோ, அவரே சொல்கிறார்-

“கிம் ஜொங்-இல் சனிக்கிழமை அவரது பிரத்தியேக ட்ரெயினில் பயணிக்கும்போது மாரடைப்பால் மரணமடைந்தார் என்று வடகொரிய அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமை முழுவதும் சி.ஐ.ஏ.-யின் உளவு சட்டலைட்கள் எடுத்துள்ள இமேஜ்களை நானும் பார்வையிட்டேன். ஜனாதிபதியின் பிரத்தியே ட்ரெயின் சனிக்கிழமை முழுவதும் தலைநகர் யொங் யாங்கைவிட்டு அசையவே இல்லை.

இந்த ட்ரெயின் நிற்பதற்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய ஷெட் ஒன்று உள்ளது. சனிக்கிழமை முழுவதும் ட்ரெயின் அந்த ஷெட்டுக்கு உள்ளேயே நின்றதை சி.ஐ.ஏ.-யின் உளவு சட்டலைட் தொடர்ச்சியாக படம் பிடித்திருக்கிறது. அப்படியானால் அவர் சனிக்கிழமை ட்டரயினில் பயணம் செய்திருக்கவும் முடியாது. ட்ரெயினில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கவும் முடியாது” என்கிறார் அவர்.

வட கொரிய ஜனாதிபதியின் இந்த ட்ரெயின் பிரபலமான ஒன்று. வெளியேயிருந்து குண்டு துளைக்காதஜன்னல்களுடன் இவருக்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது அது. அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரத்தியேகமாக விமானம் (ஏர்ஃபோர்ஸ் ஒன்) இருப்பதுபோல, இவருடைய வாகனம் இது.

பாதுகாப்பு காரணங்களுக்காக வட கொரிய ஜனாதிபதி விமானங்களில் ஏறுவதில்லை. வட கொரியாவில் இருந்து ட்ரெயினில் செல்லக்கூடிய வெளிநாடுகளுக்கு (சீனா, ரஷ்யா) மட்டுமே கிம் ஜொங்-இல் செல்வது வழக்கம்.

தென் கொரிய உளவுத்துறைத் தலைவர் கூறியது தொடர்பாக சி.ஐ.ஏ. இதுவரை வாய் திறக்கவில்லை. வரும் நாட்களில் அவர்களும் இதை உறுதி செய்ய விரும்பலாம். அப்படிச் செய்தால், வட கொரிய ஜனாதிபதியின் தரணத்தில் மர்மம் உள்ளது என்ற சந்தேகம் அதிகரிக்கும்.

இதற்கிடையே மற்றொரு வதந்தியும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. கிம் ஜொங்-இல் இறந்த சேதி வெளியுலகுக்கு திங்கட்கிழமை மதியம்தான் தெரிய வந்த போதிலும், சீனாவுக்கு மாத்திரம் அவர்களது வட கொரிய தூதர் மூலம் சனிக்கிழமையே தெரியும் என்பதுதான் அந்த வதந்தி. அதில் உண்மையும் இருக்கலாம்.
« PREV
NEXT »

No comments