ஜெயலலிதாவின் நிழலாக திகழ்ந்து வந்த சசிகலாவை இன்று அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதாவின் செயல், அதிமுகவினரிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதேசமயம், சசியின் ஆதிக்கத்தால் கடும் புழுக்கத்தில் இருந்த அதிமுகவினருக்கு பெரும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.
சசிகலா நீக்கப்பட்டார் என்ற செய்தி பரவியதும் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் அதைக் கொண்டாடியுள்ளனர்.
திருப்பூரில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு கூடிய அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். பின்னர் எம்ஜிஆர் சிலை முன்பு அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டனர். இனிப்புகளையும் வழங்கினர்.
இதேபோல திண்டிவனத்திலும் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.
இருப்பினும் சசிகலாவின் பெல்ட் ஆன மன்னார்குடி உள்ளிட்ட தஞ்சை மாவட்டப் பகுதிகளில் அமைதி காணப்படுகிறது.
No comments
Post a Comment