இக்கழிவுகளை உணவாக வழங்குவதன் மூலம் பசுக்களின் சாணத்தின் அளவு 20% குறைவடைவதாகவும், அவை வழங்கும் பாலின் அளவு 5% அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றை உணவாக உட்கொண்ட பசுக்கள் வழங்கும் பாலானது சாதாரண பசுக்கள் வழங்கும் பாலை விட ஆரோக்கியமான 'என்ச்டி ஒக்சிடன்ஸை' (Anti-oxidants) கொண்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஆராய்ச்சியாளர்கள் வைன் தயாரிக்கப் பயன்பட்ட திராட்சைப் பழங்களின் கழிவுகளை சுமார் 37 நாள் வரை பசுக்களுக்கு வழங்கியுள்ளனர்.
பின்னர் இவற்றை உண்ட பசுக்களும், வேறு உணவுகள் வழங்கப்பட்ட பசுக்களும் வழங்கிய பாலின் அளவினையும், அவற்றின் தரத்தினையும் வைத்தே இம்முடிவிற்கு வந்துள்ளனர்.
இவ் ஆராய்ச்சியை மேலும்விரிவாக மேற்கொள்ளவுள்ளதாக இம்முடிவினை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ___
No comments
Post a Comment