Latest News

November 04, 2011

நீளமான நாக்கு கொண்ட பெண்- அமெரிக்க பெண் உலக சாதனை
by admin - 0

 உலகிலேயே நீளமான நாக்கு கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 21 வயது இளம்பெண்.

வீடுகளில் அதிகமாக பேசும் வாயாடி குழந்தைகளை திட்டும் போது, உனக்கு நாக்கு ரொம்பத்தான் நீளம் என திட்டுவது உண்டு. இந்த நிலையில் உலகிலேயே நீளமான நாக்கு கொண்ட பெண் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்த சானல் டேப்பர் (21) என்பவர் தான் இந்த சாதனைக்கு சொந்தகாரர். கின்னஸ் சாதனை படைத்துள்ள சானல், கலிபோர்னியாவில் படித்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் லாஸ்ஏஞ்சல் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது, கின்னஸ் சாதனை ஆய்வாளர்கள் சானலின் நாக்கை அளந்து பார்த்தனர். அவரது நாக்கின் மொத்த நீளம் 3.8 இன் (9.8 செ.மீ) நீளம் இருந்தது. இது சாதரண மனிதனின் நாக்கு அளவை விட 2 மடங்கு அதிகமானது. கின்னஸ் சாதனைக்காக சானல் உடன் போட்டியிட்ட 2 பெண்கள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் டேப்பரை யாரும் உனக்கு நாக்கு நீளம் என்று கூறி திட்ட முடியாது...
« PREV
NEXT »

No comments