Latest News

November 14, 2011

தமிழ் இன ஒன்றுபட்ட விழிப்புணர்வின் அவசியம்
by admin - 0

தமிழ் பரம்பரிய கலாச்சாரத்துக்கு பெயர் போன யாழ்ப்பாண மண் கலாச்சாரம் கலை என தலை வைத்து தூக்கிய தமிழர் பாரம்பரிய தேசம் நன்றாகத்தான் போய்கொண்டு இருந்த்தது இப்போதும் நனறாக போகிறதா என்றால் சூலியம் வீதமே ஆம் என்று கூறவேண்டியவர்களாக இருகிறோம் .கட்டி காத்த எமது கலாச்சாரம் காற்றில் பறக்கிறது தடுத்து நிறுத்த வேலி இல்லை? வேலியாய் நிற்பவர்களே குனிந்துகொள்கிறார்கள் அல்லது கண்ணை இறுக முடிகொள்கிறார்கள். இன்றய இளய தமிழ் சமுதாயம் சிரழிவை நோக்கி படு வேகமாக சென்றுகொண்டு இருப்பதுக்கு ஆதாரமாக யாழ் நகர் பகுதியில் காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் சுற்றிவலைக்கப்ப்ட்டு யாழ் கலாச்சார உடைவு வெளிகொண்டு வரப்பட்டதை ஆதாரமாக எடுத்து கொள்ளலாம். யாழ்ப்பண நகரில் முன்னர் சுற்றி வலைப்புக்கள் நடப்பது வேறு காரணங்காளுக்காக இப்போ சுற்றிவளைப்புக்களின் காரணம் சாமுக சீரழிவுகளுக்காக பெரியவர் ஒருவர் கூறுகையில் அன்றைய சுற்றிவளைப்பின் காரணம் இன்று இல்லை என்பதால் தான் இன்றைய சுற்றிவளைப்புக்குகளின் கர்த்தாக்கள் பெருகிவிட்டது என்று ஆதாங்கமாக கூறினார்.இதனை இல்லாமல் தடுப்பதுக்கு தற்போதய சூழ்நிலையில் சாத்தியப்பாடுகள் எவ்வளவு தூரம் என்பது கேள்விகுறியான விடயமே ஆனாலும் தமிழ் இன ஓன்றுபட்ட சமுக விழிப்புனர் இதற்க்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கை. இதற்கு ஒவ்வொரு தமிழ் சமுகமும் முன் வரவேண்டும்


விவசாயி
« PREV
NEXT »

No comments