Latest News

November 09, 2011

இஸ்ரேல் விரைவில் 'முடிந்துவிடும்' : ஈரானிய ஜனாதிபதி
by admin - 0

ஈரான் மீதான தாக்குதல் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஜ்மடிநெஜாத், இஸ்ரேல் விரைவில் வீழ்ச்சியடைந்து முடிந்துபோய்விடும் எனவும் கூறியுள்ளார்.
எகிப்திய பத்திரிகையான அல் அக்பருக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி கூறியதன் பின்னர் ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத்தின் மேற்படி பேட்டி வெளியாகியுள்ளது.

"ஈரானின் ஆற்றல் அதிகரித்து வருகிறது. அதனால்தான் அது உலகில் போட்டியிட முடிகின்றது. இப்போது இஸ்ரேலும் மேற்குலகும் குறிப்பாக அமெரிக்கா, ஈரானின் ஆற்றல்கள், பாத்திரங்கள் குறித்து அச்சமடைந்துள்ளன. அதனால் அவர்கள் ஈரானின் பாத்திரத்தை நிறுத்துவற்கான இராணுவ நடவடிக்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.

தன்மீதான எந்த நடவடிக்கையையும் ஈரான் அனுமதிக்கப்போவதில்லை என இந்த கொடூரமானவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்." என அவர் கூறினார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அமைதியான நடவடிக்கைகளுக்காகவே எனக் கூறிய அவர், ஸியோனிஸ அமைப்பை (இஸ்ரேல்) பாதுகாக்க அமெரிக்கா முயற்சிகிறது. ஆனால் அதைச் செய்ய அதனால் (அமெரிக்காவினால்) முடியாது என்றார்.

"இந்த அமைப்பு (இஸ்ரேல்) உடலால் நிராகரிக்கப்பட்ட சிறுநீரகத்தை மாற்றுவதற்கு ஒப்பிடலாம். ஆம். அது வீழ்ச்சியடையும் விரைவில் முடிந்துவிடும்" என ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத் கூறினார்.
« PREV
NEXT »

No comments