Latest News

November 26, 2011

வேர்ட் டிப்ஸ்
by admin - 0

Menu தேர்வும் நீக்கலும்
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

முன்பு எங்கு எடிட் செய்தோம்?
ஒரு பெரிய வேர்ட் பைலை எடிட் செய்கிறீர்கள். இன்னொரு அவசர காரியத்தை மேற்கொள்ள பைலையும் வேர்டையும் மூடிச் செல்கிறீர்கள். திரும்ப சில மணி கழித்து வந்து வேர்டையும் அந்த பைலையும் திறந்து எடிட் செய்திட உட்கார்ந்தால் கடைசியாக எங்கு எடிட் செய்தோம் என்று நினைவில்லை. கவலை வேண்டாம். ஷிப்ட் + எப் 5 (Shift + F5) அழுத்துங்கள். இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்திற்கு கர்சர் செல்லும். மறுபடியும் அழுத்தினால் அதற்கு முந்தைய எடிட் இடத்திற்குச் செல்லும். இப்படியே மூன்று இடத்திற்குச் செல்லும். அதன்பின் அழுத்தினால் என்ன ஆகும்? மீண்டும் விட்ட இடத்திற்கே வரும்.
« PREV
NEXT »

No comments