Latest News

November 23, 2011

தமிழ் வளர்ப்போம்
by admin - 0

லகர, ளகர, ழகர வந்துள்ள சொற்களின் பொருள் வேறுபாடுகள்.

அலகு - பறவையின் மூக்கு
அளகு - பெண் மயில்

அழகு - வனப்பு
அலம் - கலப்பை
அளம் - உப்பளம்
அலி - திருநங்கை(ஆண், பெண் தன்மைகள் அற்ற பேடி)
அளி - கொடு, அருள்
அழி - இல்லாமற் செய்
அலை - கடலின் அலை
அளை - சோறு, தயிர்
அழை - கூப்பிடு
ஆல் - ஆலமரம்
ஆள் - ஆளுதல், ஆண்மகன்
ஆழ் - முழுகு

ஆலி - மழைத்துளி
ஆளி - விலங்கு
ஆழி - கடல்
இலகு - விளங்கு
இளகு -நெகிழ்
இலை -தாவர உறுப்பு
இளை - மெலி, காவற்காடு
இழை - ஆபரணம், நூற்கும் நூல்

உலர - காய
உளர - தடவ
உலவு - சுற்று, நடந்து செல்
உளவு - இரகசியம், வேவு
உழவு - பயிர்த் தொழில்
« PREV
NEXT »

No comments