சார்க் வலய நாடுகளுக்கான சர்வதேச தரத்திலான விவசாய விதை வங்கி ஒன்றை இலங்கையில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு ஏற்ப அமைச்சரவை இதற்கான தீர்மானத்தை எடுத்தள்ளது.
மாலைத்தீவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட நான்கு உடன்படிக்கைகளின் ஒன்றுக்கு அமைவாக இந்த விதை வங்கி நிருவப்பட உள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடு மற்றும் வலய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு போன்றவற்றின் அடிப்படையில் வலயத்தில் நிலவும் விவசாய பயிர்ச் செய்கை விதைகளுக்கான தட்டுப்பாட்டை இனங்கண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வங்கி அமைக்கப்படுகின்றது.
No comments
Post a Comment