லார்ட்ஸ் டெஸ்டில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து லண்டன் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த குற்றத்தின் மூலம் கிரிக்கெட் மதிப்பையும் குலைத்து விட்டனர் என்றும் நீதிபதி தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், 27, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், 28, முகமது ஆமிர் 19, ஆகியோர் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டு பிடிபட்டனர். இந்த குற்றம் புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்ட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்ப முடியாது.
கடந்த ஆண்டில் லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஸ்பாட் பிக்சிங் மூலம் கிரிக்கெட் வீரர்கள் ரூ. 10 லட்சம் வரை லஞ்சம் பெற்றனர். தாங்கள் வேண்டும் என்றே தோல்வியை தழுவினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சல்மான் பட் , முகமது ஆசிப் , முகமது ஆமிர் ஆகியோர் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்படட்து.
இந்த மூன்று வீரர்கள் மீதும் சதிசெய்து ஏமாற்றுதல், லஞ்சப்பணம் பெறுதல் போன்ற பிரிவுகளில், லண்டனில் உள்ள "சவுத்வொர்க் கிரவுன்' கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. குற்றத்தை ஒத்துக் கொண்ட முகமது ஆமீரிடம் விசாரணை நடக்கவில்லை. மற்ற இருவரும் குற்றவாளிகள் என, விசாரணைக் குழு தீர்ப்பு வழங்கியது.
இன்று நீதிபதி இவர்களுக்குரிய தண்டனை விவரத்தை அறிவித்தார். இதன்படி தரகர் மற்றும் வீரர்கள் 3 பேருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சல்மான்பட்டுக்கு இரண்டரை வருடமும், முகம்மதுஆசீப்புக்கு ஒரு வருடமும், தரகர் மசார் மஜீத்துக்கு 2 வருடமும், ஆமீருக்கு 6 மாதமும் சிறைவாசம் அநுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
No comments
Post a Comment