Latest News

November 08, 2011

கூகுள் + இன் மற்றுமொரு புதுவசதி _
by admin - 0

கூகுளின் சமூக வலையமைப்பான கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புக்கள் தங்களுக்கென கூகுள் + இல் ஒரு பக்கத்தினை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசமாகவே இவ்வசதியினை வழங்குவதாகவும், இதற்கான பக்கத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தப் போவதில்லையெனவும் கூகுள் அறிவித்துள்ளது.

இதே போன்ற வசதியினை பேஸ்புக் ஏற்கனவே வழங்கி வருகின்றது.

கூகுள் + அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக வலையமைப்பு. தற்போது இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 40 மில்லியனாகும்.

எனினும் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட பலமடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

கூடிய விரைவில் இது பேஸ்புக்கிற்கு பலத்த சவாலளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 
___

« PREV
NEXT »

No comments