Latest News

November 15, 2011

நேர்ஸ் காரணமாக ராஜஸ்தான் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா
by admin - 0

ராஜஸ்தானில் அஷோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் இன்று ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.

அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைகளிலும் புகார்களிலும் சிக்கியதன் எதிரொலியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து முதல்வர் அஷோல் கெலாட் டெல்லியில் காங்கிரஸ் மேலித்துடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அமைச்சரவையை மாற்றியமைப்பதையொட்டி, அமைச்சர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்துவிட்டதாக உள்துறை அமைச்சர் ஷாந்தி தாரிவால் தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சரவை அவசர கூட்டத்துக்கு முதல்வர் கெலாட் அழைப்பு விடுத்திருந்தார்.

நர்ஸ் பன்வாரி தேவி காணாமல்போன விவகாரம் தான் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

நர்ஸ் பன்வாரி காணாமல் போய் 70 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மஹிபால் மதெர்னாயிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு, முன்னாள் அமைச்சர் மாதர்னாவைக் காப்பாற்றும் முயற்சியில் இருப்பதாகவும், அதனால் இந்த விசாரணையில் பல்வேறு இடையூறுகள், திசைதிருப்பல்கள் ஏற்படுத்துவதாகவும் மீடியாக்களில் செய்திகள் வந்தன.

இதற்கிடையே, ஒரு தனியார் தொலைக்காட்சி பான்வாரி தேவியை பிளாக்மெய்ல் செய்து கொலை செய்துவிட்டார்கள் என்ற ரீதியில் ஒரு சிடியை வெளியிட்டு காட்சிகளை வெளியிட்டது.

இந்த சிடி காட்சிகள் மீடியாக்களில் ஒளிபரப்பப் பட்டதால், இது உரிமை மீறல் என்றும், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.Subscribe to விவசாயி by Email
« PREV
NEXT »

No comments