Latest News

November 19, 2011

யாழ் மற்றும் கிளிநொச்சி ஆலயங்களுக்கு ஒரு லட்சம்
by admin - 0

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் தி.மு.ஜயரட்ன யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 240 இந்து ஆலயங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் நிதியினை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு காலை பத்து மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, பாரர்ளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், சில்வேஸ்திரி அலென்ரின், யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன், மத குருமார்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் ஆலய நிர்வாகிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

« PREV
NEXT »

No comments