Latest News

November 06, 2011

கடலில் குளிக்க சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
by admin - 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடலில் குளிக்க சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தளவாய் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் ஏழு மாணவர்கள் மேலதிக வகுப்பு முடிந்த பின்னர் புன்னக்குடா கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

இவர்களில் ஐந்து மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர். முதலில் குளிக்க சென்று ஏழு மாணவர்களும் குளித்து கொண்டிருந்த போது கடலில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்களும் குறித்த மாணவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். இதன்போது இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் ஏனைய ஐந்து மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலங்கள் ஏறாவூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிர் தப்பிய ஐந்து மாணவர்களும் மயக்க நிலையில், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments