Latest News

November 26, 2011

அந்நியன் அவதரித்துவிட்டானாம் – குன்னூர் பகுதியில் பரபரப்பு!
by admin - 0

அந்நியன் சினிமா பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும் என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் ‘மரண அறிக்கை& குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள், அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்), முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.


‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக பொதுக்குழு என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். ‘அந்நியன்’ படத்தில் நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள் வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments