மத்தி்ய உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வந்தபோது திடீர் என்று ஒரு இளைஞர் யாரும் எதிர்பாரா விதமாக சரத் பவாரின் கன்னத்தில் அறைந்தார். இதில் சரத் பவார் நிலைகுலைந்து சுவரில் சாய்ந்தார்.
உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை அடித்து, உதைத்து கைது செய்தனர். அப்போது தன்னிடம் இருந்த கத்தியை உருவி அவர் மிரட்டினார்.
கைதான அந்த நபரின் பெயர் ஹர்விந்தர் சிங். இவர் தான் கடந்த சனிக்கிழமை டெல்லி நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமை (86) கன்னத்தில் அறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவரை அங்கிருந்த போலீசார் ஹர்விந்தர் சிங்கை இழுத்துச் சென்றனர். ஆனால், கைது செய்யவில்லை.
இந் நிலையில் தான் இன்று திரும்பி வந்து சரத் பவாரைத் தாக்கியுள்ளார். அந்த நபர் கூறுகையில்,
எங்கு பார்த்தாலும் ஊழல் மண்டிக் கிடக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்ததற்கு சரத் பவார் தான் காரணம். அவரை கொல்லத் தான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. நான் ஒன்றும் இதை விளம்பரத்திற்காக செய்யவில்லை என்றார்.
1 comment
the nation salute's u HARVEENDAR....
U are a real hero like Bagath sing,vanji naathan.
Post a Comment