Latest News

November 10, 2011

ஆல்கஹால் இல்லாத விஸ்கி தயாரிப்பு
by admin - 0

போதையை ஏற்படுத்துகின்ற ஆல்கஹால் இல்லாத விஸ்கியை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட்டிஷ் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது.
சாதாரணமாக பியரில் 4 முதல் 6% ஆல்கஹால் மட்டுமே உள்ளது. வைன் 9-16%, வோட்கா 40%, பிராந்தி 35-60%, ரம் 37-80% என்று சரக்குக்கு சரக்கு ஆல்கஹால் சதவீதம் வேறுபடுகிறது.

‘ஆர்கே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விஸ்கி டிசம்பர் 1-ம் திகதி முதல் அறிமுகமாக உள்ளது.மதுவை விட்டுவிடும் ஐடியாவில் இருப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இது ஏற்றது என்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் அதிகமாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் விலை ரூ.780, ரின் ரூ.310 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »

No comments