Latest News

November 14, 2011

தேமுதிகவுக்கு தாவிய இளங்கோவன் கோஷ்டி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ
by admin - 0

ஈவிகேஎஸ் இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான பாலூர் சம்பத், இன்று தேமுதிகவில் இணைந்தார்.

வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏவான இவர் தனது ஆதரவாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்தார்.

வேலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். சமீபத்தில் இவர் தலைமையில் ஆம்பூரில் நடந்த கூட்டத்தில், இவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆளுமை தடுமாற்றத்தின் காரணமாகவும், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலை அறிந்தும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகுவது என்று முடிவெடுத்தனர்.

தொண்டர்களின் எதிர்கால நிலையை அறிந்து தே.மு.தி.க.வில் இணைந்து கட்சி பணியாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந் நிலையில் அவர் தேமுதிகவில் இணைந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாலூர் சம்பத், ஆம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments