Latest News

November 13, 2011

நாளை நள்ளிரவுடன் தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலக தீர்மானம்
by admin - 0

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து சேவையில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் டிசல் நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்த போதும் அதற்கு எதுவித தீர்வுகளும் கிடைக்காததால் இம்முடிவை எடுத்ததாக கொழும்பில் இன்று இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயர்வால் பஸ் உரிமையாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் டிசல் நிவாரணம் வழங்காவிடின் நாளை நள்ளிரவு முதல் சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments