Latest News

November 15, 2011

30 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னாரில் விவசாய, கால்நடை, இயந்திர கண்காட்சி
by admin - 0

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக விவசாய, கால்நடை, இயந்திரத் தொழில்நுட்பக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சி நேற்றும் நேற்று முன்தினமும் முருங்கன் பாடசாலையில் இடம் பெற்றது.

இலங்கையில் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களுக்கான சமூக, பொருளாதார அபிவிருத்திக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவித்திட்டத்தின் கீழ் இலங்கை வர்த்தக, கைத்தொழில் சம்மேளனங்களின் ஒன்றியத்தின் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டம் மற்றும் மன்னார் மாவட்ட வர்த்தகக் கைத்தொழில்,விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இந்தக் கண்காட்சி இடம் பெற்றது.

அத்துடன் மன்னார் மாவட்டச் செயலகம் வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களம் ஆகியனவும் கூட்டு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.

இந்தக் கண்காட்சியில் விவசாய, கால்நடைத் துறைகளை வலுப்பெறச் செய்து உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கூடிய நவீன தொழில் நுட்பத்தில் உருவான இயந்திர உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும் இந்தத் துறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான உள்ளீடுகள் தொடர்பான சகல தகவல்களும் வழங்கப்பட்டன.
« PREV
NEXT »

No comments