கைது செய்யப்பட்ட வேளை குறித்த நபரிடம் இருந்து கடலட்டைகள் அடங்கிய 29 பொதிகளையும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலட்டைகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யும் செயலில் ஒரு குழு ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடலட்டைகளைப் பிடிப்பதைவிட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது லாபம் என தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்டுள்ள கடலட்டைகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments
Post a Comment