Latest News

November 16, 2011

2013ல் யாழ்ப்பாணத்திற்கு லக்ஷ்பான மின்சாரம்
by admin - 0

யாழ்ப்பாணத்திற்கு 2013 ஆம் ஆண்டு தென்பகுதியிலிருந்து லக்ஷ்பான மின்சாரம் கிடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் டி.கே. குணதிலக்க தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் மின்விநியோகத்தை சீராக்குவதற்காக புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அத்திட்டங்களினுடாக யாழ்ப்பாணத்தில் முழுமையான மின்விநியோகத்தை நடைமுறைப்படத்துவதற்குரிய வேலைத்திட்டம் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திருத்த வேலைகள் காரணமாக மின்தடை நடைமுறையில் இருக்கும் எனவும் அடுத்த வருடம் மின் தடையில்லாமல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments