Latest News

October 27, 2011

வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் 7ம் அறிவு
by admin - 0

வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த 7 ஆம் அறிவு, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டதட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாசும் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 12 கோடி. இது ஷங்கரின் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம். ஒரு விழாவில், ‘எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், காலையில் நாலு இட்லிக்கு மேல சாப்பிட முடியுமா?’ என்று தத்துவம் பேசியவர் முருகதாஸ்.
« PREV
NEXT »

No comments