Latest News

September 04, 2011

கனிமொழியை அரசியலுக்கு அறிமுகப்படுத்த கருணாநிதி தயக்கம்-விக்கிலீக்ஸ் இணையத்தளம்
by admin - 0

தந்தை என்ற முறையில் தனது மகள் கனிமொழி மீது கொண்டிருக்கும் வாஞ்சைக்கப்பால் அவரை அரசியலில் ஈடுபடுத்த கருணாநிதி விரும்பியிருக்கவில்லையெனவும் ஆனால், கனிமொழியின் தயாரான ராசாத்தியின் வலியுறுத்தலினாலேயே கனிமொழியை கருணாநிதி அரசியலில் தீவிரமாக ஈடுபடச் செய்தார் என்றும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கருணாநிதியின் மனைவிமார்களில் ஒருவரே ராசாத்தியாகும். 2008 ஜூனில் அமெரிக்க இராஜதந்திர பிரதிநிதிகள் நாயகமாக இருந்த டெனிஸ் ரிகொப்பர் அனுப்பிவைத்த இரகசிய கேபிளில் முன்னாள் வர்த்தகரான சிவப்பிரகாசத்திற்கும் கொப்பருக்கும் இடையிலான உரையாடல் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. சிவப்பிரகாசம் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருப்பவராகும். கருணாநிதிக்கு கட்சிக்குள்ளும் ஏனைய கட்சிகளிலிருந்தும் சவால் விடுப்போர் இல்லை. ஆனால், அவரின் குடும்பத்திலேயே அவர் பாரிய பிரச்சினையைக் கொண்டிருக்கிறார் என சிவப்பிரகாசம் கூறியதாக அந்தக் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமயம், கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். தனது மகள் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வர அவர் விரும்பியிருக்கவில்லை. ஆனால், கடந்த வருடம் பாராளுமன்றத்தில் கனிமொழிக்கு ஆசனத்தைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். முதல் மனைவிக்குப் பிறந்த மகன்மாரின் அரசியல் அதிகாரம் தொடர்பாக பொறாமை கொண்டிருந்த கனிமொழியின் தாயாரின் வலியுறுத்தலினால் பாராளுமன்றத்தில் கனிமொழிக்கு ஆசனத்தை வழங்க வேண்டிய நிலைமைக்கு கருணாநிதி தள்ளப்பட்டிருந்தார். ஸ்டாலின்அழகிரி மோதல்கள் பற்றி கதை பகிரங்கமானதாகும். ஆனால், கனிமொழியை அரசியலுக்கு அறிமுகப்படுத்த கருணாநிதி தயக்கம் கொண்டிருந்தமை பற்றிய பிரகாசத்தின் கருத்தானது சிக்கலின் மற்றொரு தன்மையைக் காட்டுவதாக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி இப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி வழக்கில் சிறையில் உள்ளார். 2007 ஜூனில் அவர் ராச்சிய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2 மனைவிமார் மற்றும் அரசியல்வாதிகளான மூன்று பிள்ளைகள் ஆகியோரின் போட்டிக் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகளை சமாளிக்கும் பிரச்சினையை கருணாநிதி கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அத்துடன், தமிழ் நேச அணிகளின் சச்சரவுகளையும் அவர் கொண்டிருக்கிறார். தனது குடும்ப வாழ்வின் சர்ச்சையை முதியவரான கருணாநிதி எவ்வாறு வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென்பதே தமிழ்நாட்டின் 38 லோகசபை ஆசனங்களில் 34 ஐ தி.மு.க. கைப்பற்றுவதற்கான முயற்சிகளுக்கு முக்கியமானதாக அமையும். இப்போது 38 இல் 34 ஆசங்களை தி.மு.க.வும் அதன் நேச அணிகளும் கொண்டுள்ளன என்று அந்தக் கேபிளில் தெரிவிக்கப்பட்டிருந்தது பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றியீட்டுவதற்கு முன்னராக இந்தக் கேபிள் அனுப்பப்பட்டிருந்தது.
« PREV
NEXT »

No comments