மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியாக ஒரு பரபரப்புத் தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பைக்குள் ஊடுறுவி கொலை வெறித் தாக்குதலை நடத்திய 10 பேர் கொண்ட பாகிஸ்தானிய தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த கசாப்புக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியதாக அந்த தகவல் கூறுகிறது.
ஆனால் கசாப்பின் பிறந்தநாள் எது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கசாப்பின் பிறந்த நாள் 1987, ஜூலை 13 என்று ஒரு தகவலும், 1987, செப்டம்பர் 13 என்று இன்னொரு தகவலும் கூறுகிறது. ஜூலை 14 என்று ஒரு தகவல் கூறுகிறது.
விக்கிபீடியாவில் கசாப்பின் பிறந்த நாள் 1987, ஜூலை 13 என்று முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தொடர்ந்து அந்த பிறந்த நாளையும் போட்டுள்ளனர், 1987, செப்டம்பர் 13 என்றும் போட்டுள்ளனர்.
எந்த ஆண்டு, எந்த மாதம் இந்த கசாப் பிறந்தான் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்ற போதிலும், அவனது பிறந்த தேதி 13 என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. எனவே இந்த தாக்குதலை கசாப்புக்காக தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்றும் கருத முடியும்.
2008 தாக்குதலில் உயிருடன் சிக்கியவன் கசாப் மட்டுமே. அவனை மும்பை ஆர்தர் சாலை சிறையில் படு பலத்த பாதுகாப்புடன் அடைத்து வைத்து பல கோடிகளை செலவிட்டு பாதுகாத்து வருகிறது இந்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது
click here.
No comments
Post a Comment