Latest News

July 19, 2011

ஆண்கள் சீதனம் கொடுக்க வேண்டிய நிலை
by admin - 0

 ஏழு கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் தமிழகத்தில் வசிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது. இதில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாகவும், சில மாவட்டங்களில் பெண்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்திய மக்கள் தொகை பட்டியல் 120 கோடியாக இருக்கிறது என கடந்த சில மாதங்களுக்கு வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

இன்று தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.52 சதவீதம் பேர் கிராமங்களிலும், சென்னை, மதுரை, கோவை போன்ற நகர் பகுதியில் 48 சதவீதம் பேர் வசிப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 






தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871. பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் ஆவர். இதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 784 பெண்கள், ஆண்களை விட குறைவாக உள்ளனர். மொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள் 80.33 சதம் ஆகும். ஆண்கள் 86. 81. பெண்கள் 73. 86. 

சென்னை நகர்ப்புற மக்கள் தொகை 13 சதவீதமும் , விழுப்புரத்தில் கிராமப்புற மக்கள் எண்ணிக்கை 7.94 சதவீதம் உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments