Latest News

July 28, 2011

பாலை பாதுகாக்கும் முறைகள்
by admin - 1

கொதிக்கவைத்து பாலின் தரமறிதல்: 5 மில்லி பாலை சோதனைக்குழாயில் எடுத்து சூடுசெய்ய வேண்டும். பொங்கி வந்தால் நல்ல பால். திரிந்துபோனால் பால் கெட்டுவிட்டது என அறிந்துகொள்ளலாம்.
* பால்மானிச் சோதனை: பால்மானியின் அளவு 24க்கு குறைந்திருந்தால் தண்ணீர் கலந்த பால் எனலாம். எருமைப்பாலில் 26-28, பசும்பாலில் 28-30, கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் 30-32 இருக்கும்.
* கொழுப்பு அறியும் சோதனை: கெர்பர் பியுட்டிரா மீட்டரில் 10 மி.லி, கெர்பர் அமிலம், 10.75 மிலி பால், 1 மி.லி. அமைல் ஆல்கஹால் சேர்த்து கெர்பர் சென்டிரிபியூஜில் வைத்து 3 நிமிடம் சுற்றினால் கொழுப்பு தனியாக தெரியும். பசும்பாலில் 3-5 சதம், எருமைப்பாலில் 6-8 சதம் கொழுப்புச்சத்து இருக்கும்.
* கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு: 0.25 து பால்மானி அளவு (27 டிகிரி செ) + (0.25 து கொழுப்புச்சதம்) + 0.44.
* குளிர வைத்தல்: பாலைக் கேன் கூலர் (அ) பல்க் கூலரில் 2டிகிரி செ.க்கு குளிரவைத்து ஒரு நாள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
* பதப்படுத்துதல்: பாலை 63 டிகிரி செ.க்கு 10நிமிடம் சூடுசெய்து 5 டிகிரி செ.க்கு குளிரவைத்து ஒரு நாள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
* பதப்படுத்துதல்: பாலை 63 டிகிரி செ.க்கு 30 நிமிடங்கள் சூடுசெய்து 5 டிகிரி செ.க்கு குளிரவைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் பாதுகாக்கலாம். இதற்கு குறைந்த வெப்பம், அதிக நேரம் பாஸ்டுரைசேஷன் என்று பெயர்.

கிரீம், வெண்ணெய், நெய் தயாரித்தல்

* கிரீம்: (40 சதம் கொழுப்பு) - பாலை கிரீம் செப்பரேட்டர் மிஷினில் ஊற்றி இயக்கினால் கிரீம் ஒரு புறமும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மறுபுறமும் பிரிந்துவரும். கிரீம் எடுப்பதற்கு கறந்த பாலை அப்படியே உபயோகப்படுத்த வேண்டும். குளிர்விக்கப்பட்ட பாலில் கிரீம் எடுக்க முடியாது.
* வெண்ணெய்: ( 80 சதம் கொழுப்பு) - சூடு செய்து ஆறவைத்த கிரீமை குளிர்சாதனப் பெட்டியில் 1 நாள் வைத்திருந்து வெண்ணெய் கடையும் இயந்திரம் மூலம் வெண்ணெய் தயாரிக்கலாம். கிரீமை இயந்திரத்தில் கால்வாசி அளவே நிரப்ப வேண்டும். இயந்திரம் சுற்றும்பொழுது 10 டிகிரி செ.க்கு குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். வெண்ணெய் உருவான பிறகு மீதமுள்ள நீரை அடியிலுள்ள குழாய் வழியே வெளியேற்ற வேண்டும். இந்த வெண்ணெயில் உண்பதற்கென்றால் 3 சதம் உப்பு சேர்க்கலாம். நெய் தயாரிப்பதற்கு என்றால் உப்பை சேர்க்கக்கூடாது.
நெய்: (99.9 சதம் கொழுப்பு) - கிரீம் (அ) வெண்ணெயைக் காய்ச்சினால் நெய் கிடைக்கும். கிரீமில் உறைமோர் ஊற்றி மறுநாள் காய்ச்சினால் நெய் வாசனையுடன் இருக்கும். கிரீமிலிருந்து நெய் தயாரிக்கும்பொழுது கசடு அதிகமாக இருக்கும்.
« PREV
NEXT »

1 comment

Yazhini said...

நல்ல தகவல்கள் !