Latest News

July 31, 2011

அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து..த்ரிஷா பேட்டி
by admin - 0

நான் இன்றைக்கு நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் எனக்கான மவுசு எப்போதும்போலத்தான் உள்ளது என்கிறார் நடிகை த்ரிஷா.

திருமணம், ரகசிய நிச்சயதார்த்தம், படங்கள் தோல்வி என தொடர்ந்து வரும் செய்திகளால் நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அவர் அஜீத்துடன் நடித்த மங்காத்தா வெளியாகிறது. இதனால் தனது செல்வாக்கு மீண்டும் பழைய உச்சத்தை தொடும் என நம்புகிறார் த்ரிஷா.

மங்காத்தா வெளியாவதையொட்டி அஜீத்தும் த்ரிஷாவும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அப்படி த்ரிஷா கொடுத்த பேட்டி இது:

அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து...

அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.

மங்காத்தாவில் கவர்ச்சியாக நடித்துள்ளீர்களாமே?

அதெல்லாம் இல்லை. இதில் நான் ஒரு அப்பாவிப் பெண். அதில் எனக்கும் அஜீத்துக்குமான காதலும் இருக்கும். கவர்ச்சி இருக்காது.

வேறு இந்திப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லையே?

காட்டா மிட்டாவுக்கு பிறகு சில இந்திப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக்கொள்ள வில்லை.

தென்னிந்திய நடிகைகள் இந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையா?

என்னைப் பொறுத்த வரைபாலிவுட் வரை போவதே பெரிய ஸ்டெப்தான். அங்கு முழு கவனத்தையும் செலுத்தினால் முன்னேற முடியும். எனக்கு சென்னையை விட்டு போக விருப்பம் இல்லை. இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பது கஷ்டமான ஒன்று.

படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

மாதம் 30 நாட்களும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ரிலாக்ஸாக நடிக்க விரும்புகிறேன்.

முன்பு மாதிரி த்ரிஷா பரபரப்பாக இல்லையே... உங்கள் முக்கியத்துவம் குறைந்துவிட்டதா?

நான் அப்படி நினைக்க வில்லை. குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அப்படி நினைக்கலாம். வந்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு நடித்து இருந்தாலும் என்னை விமர்சிப்பார்கள். நடிகைகள் சினிமாவில் இருப்பது குறைவான நாட்கள்தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரியவில்லை.

நிறைய நடிகைகள் வருகிறார்களே, போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

நான் போட்டியாக யாரையாவது நினைத்தால்தானே இந்தப் பிரச்சினை. 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமையால் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். புதுமுக நடிகைகள் எனக்குப் போட்டியில்லை. பத்து வருடங்களுக்கு முன் என்னோடு அறிமுகமான நடிகைகளைத் தான் போட்டியாக கருதுகிறேன். அப்படிப் பார்த்தால் இப்போது எனக்கு போட்டியே இல்லை. புதுமுகங்கள் வருகை என்பது இயல்பானது. பத்தாண்டுகளுக்கு முன் நானும் புது நடிகையே.
« PREV
NEXT »

No comments