Latest News

July 20, 2011

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பில் சர்ச்சை: மீள அளவிடவுள்ளது நேபாளம் _
by admin - 0

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் ஏற்பட்ட குழப்பத்தினைத் தொடர்ந்து அதனை மீண்டும் அளக்க நேபாளம் முடிவெடுத்துள்ளது.

உலகின் அதி உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. இதன் உயரத்தினை 1954 ஆம் ஆண்டு அளந்த இந்தியா எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

எனினும் அதன் பின்னர் பல்வேறு தரப்பினரல் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகள் வேறுபட்ட அளவுகளை காட்டி நின்றன. 

இதேபோல் சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீட்டர் எனவும் மேற்பகுதியில் உள்ள பனிப் பகுதியுடன் சேர்த்து கணக்கிடும் போது அதன் உயரம் 8.847 மீட்டர் எனவும் தெரிவித்துள்ளது . 

இந்நிலையில் எவரெஸ்ட்டின் உயரம் தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது. 

இது குறித்து கருத்துத் தெரிவித்த நேபாள நாட்டின் நிலச்சீர்திருத்தம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் பேச்சாளர் கோபால் கிரி, கடந்த ஆண்டு நேபாள், சீனா இடையே எல்லைப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடந்த போது சீனப் பிரதிநிதிகள் எவரெஸ்ட் சிகரத்தின் சரியான உயரம் 8,844 என கூறினர். 

முதன்முதலாக 1856 ஆம் ஆண்டு தான் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவீடு செய்யப்பட்டது. இது அடி அளவீட்டின் படி 29 ஆயிரத்து 29 அடி(29029 ) என அளவிடப்பட்டது. 

தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில், மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தினை துல்லியமாக அளவிட அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன் பிறகே இந்தியா கூறிய அளவு சரியானதா?, சீனா கூறிய அளவீடு சரியானதா? என்ற குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என ‌கோபால் கிரி தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments