Latest News

July 24, 2011

பத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையை திறந்தால் உலகுக்கு ஆபத்து ஏற்படலாம்
by admin - 0




திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் திறக்கப்படாமல் இருக்கும் பி அறையில் மன்னர் பயன்படுத்திய தங்கக் கட்டில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பி அறை மட்டுமே இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த அறையை திறப்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்னும் எந்தஒரு முடிவையும் அறிவிக்கவில்லை. 

இது வரை திறக்கப்பட்ட 5 அறைகளில் ஏ அறையில் தான் அதிகளவில் தங்கம், வெள்ளி, ரத்தினம், வைரம், வைடூரியம் கிடைத்தது. இதுவரை கிடைத்தவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி. ஆனால் பி அறையில் இதை விட பல மடங்கு அதிகமாக பொக்கிஷம் இருக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் தான் திருவிதாங்கூர் மன்னர் இந்த அறையை அதிக பாதுகாப்புடன் பூ்ட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த அறையின் கதவில் நாகப்பாம்பின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் பல அர்த்தங்கள் கூறுகிறார்கள். இந்த அறையில் மன்னர் பயன்படுத்திய தங்கக் கட்டில் உள்பட விலை மதிக்க முடியாத ஆபரணங்கள், அரிய வகை பொருட்கள் இருப்பதாக கூறுகின்றனர். 

மன்னர் காலத்தில் அவர் பயன்படுத்திய ஏராளமான பூஜை பொருட்களும் இந்த அறையில் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த அறையை திறந்தால் உலகுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மன்னர் குடும்பத்தினர் உள்பட சிலர் கூறுகின்றனர். இவற்றில் எது உண்மை என்பது அறையை திறந்த பிறகே தெரியும்.Get cash from your website. Sign up as affiliate.

« PREV
NEXT »

No comments