Latest News

July 02, 2011

ஈரோட்டில் 8 வயது மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் கைது
by admin - 0

 ஈரோடு மாவட்டத்தில் தனது 8 வயது மகளை கதற கதறத் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார் ஒரு கொடூர மனம் படைத்த தாய்.

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (29). நடனக் கலைஞராகவும், கட்டிட மேஸ்திரியாகவும் வேலைப்பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ராதா (27). இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தீபக்காந்த் (10) என்ற மகனும், நிவேதா (8) என்ற மகளும் உள்ளனர். நல்லாகவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக் 5-ம் வகுப்பும், நிவேதா 3-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

அய்யப்பனும், ராதாவும் ஒருவர் நடத்தையில் ஒருவர் சந்தேகம் கொண்டு சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மகள் நிவேதாவை ராதா கதறத் கதற அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் நிவேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மகளைக் கொன்ற பிறகும் வெறியடங்காத ராதா மகன் தீபக்கையும் கொல்ல வந்தார். அரிவாளில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த தாயைப் பார்தத் அவன் பயத்தில் அலறினான். அவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

நிவேதா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதையும், ராதா தீபக்கை வெட்ட வந்ததையும் பார்த்த அவர்கள் திடுக்கிட்டனர். அப்போது அங்கு வந்க அய்யப்பன் மகனை மீ்ட்டார். பின்னர் மகளின் பிணத்தைப் பார்த்து கதறினார். ஆனால் ராதாவோ பித்துப் பிடித்தது போல் இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராதாவையும், அய்யப்பனையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரித்தபிறகு ராதாவை கைது செய்தனர்.

ராதா போலீசுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை ஏமாற்றியதால் தான் நான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். ஆனால் நான் தற்கொலை செய்துகொண்டால் என் பிள்ளைகள் அனாதையாகிவிடுவார்களே என்பதால் அவர்களைக் கொன்று விட்டு நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். அதனால் தான் முதலில் நிவேதாவைக் கொன்றேன், தீபக்கை கொல்வதற்குள் அவன் அலறியதால் அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவனை காப்பாற்றிவிட்டனர் என்றார்.
« PREV
NEXT »

No comments