Latest News

July 27, 2011

பயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்
by admin - 0

நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை விரும்பிப் பயன்படுத்தும் நேயரா! இடையூறு தரும் விளம்பரங்களைத் தடை செய்திட வேண்டுமா? இன்னும் சிறப்பாக பாஸ்வேர்ட்களை நிர்வகிக்க ஆசையா? முப்பரிமாணத் தோற்றத்தில் வீடியோ கிளிப்களையும் போட்டோக்களையும் காண ஆசையா? உங்களுக்குத் தேவையான சில ஆட் ஆன் புரோகிராம்களை இங்கு தேடித் தருகிறோம். 
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது. பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டா விட்டாலும், மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது. 
மற்ற பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே, பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன. பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால், இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை, பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது. ஆனாலும் பல புரோகிராம்கள் இணைந்த செயல் கொண்டுள்ளன. ஏற்கனவே இருந்த பலவற்றையும், புதியதாக வெளியான சில ஆட் ஆன் தொகுப்பு களையும் இயக்கிப் பார்த்து, அவற்றின் திறன் மற்றும் தரும் வசதிகளின் அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. இவை பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன. மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில், எளிதாகக் கம்ப்யூட்டரிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.
1. கூகுள் ஷார்ட்கட்ஸ் (googleshortcuts): என்ன தான் பயர்பாக்ஸ் பிரவுசரை (குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப் பயன்படுத்தினாலும், நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம். அந்த வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச் சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி, கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும் பட்டன்களை, பயர்பாக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக, ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம். இதனை இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பாக்ஸில், கூகுள் தரும் பல வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம் இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. 
« PREV
NEXT »

No comments