Latest News

July 03, 2011

பிலிப்பின்ஸ்: வெள்ளத்தில் சிக்கி 17 குழந்தைகள் சாவு
by admin - 0

 ஜூலை 2: பிலிப்பின்ஸ் நாட்டில் ஆற்றின் கரை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் 17 குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

 கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தாவோ நகரத்திலுள்ள பாங்கி ஆற்றின் கரை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் நகரமே மூழ்கியது. ஒரே இரவில் தாவோ நகரம் 10 அடி உயர நீரில் மூழ்கியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டதாக "தேசிய பேரிடர் ஆபத்துதவி மற்றும் மேலாண்மைக் கவுன்சில்'அதிகாரிகள் தெரிவித்தனர்.
 வெள்ளம் உடனடியாக மறுநாளே வடிந்து விட்டாலும் 17 குழந்தைகள் உள்பட 30 பேர் இறந்தனர்.
 தாவோ மற்றும் மிண்டநாவ் நகரங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்வதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கடந்த சில வாரங்களாக கடுமையாக பெய்து வரும் மழை மற்றும் புயலுக்கு ஏற்கெனவே 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments