Latest News

July 27, 2011

கொலை செய்வது எப்படி?- படித்துவிட்டு மனைவியை 100 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்!
by admin - 0


 இங்கிலாந்தில் ஒருவர் இணையதளத்தில் கொலை செய்வது எப்படி?, குற்றம் செய்ய 10 குறிப்புகள் ஆகியவற்றை படித்துவிட்டு தனது மனைவியை குறைந்தது 100 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயரைச் சேர்ந்தவர் ஆல்பிரடோ மெரிகோ(43). அவர் கடந்த 2008-ம் ஆண்டு லிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் (40). அவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். 

திருமணம் முடிந்த நாளில் இருந்தே இருவருக்கும் தகராறு தான். தன்னை சந்தேகப்படுவதாகவும், கட்டுப்படுத்த முயல்வதாகவும் கணவர் மீது லிண்டா புகார் கூறி வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு லிண்டா யார்க்ஷயரில் உள்ள தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர் விவகாரத்து பெறுவதற்கு முயற்சி செய்து வந்தார். 

வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த லிண்டா அங்கு தனது கணவரை அனுமதிக்கவில்லை. தங்கள் மகனுக்கு பெற்றோர் தேவை என்று கூறி லிண்டாவுடன் சேர முயன்றுள்ளார் மெரிகோ. ஆனால் லிண்டா ஒரேயடியாக மறுத்துவிட்டார்.






இதனால் ஆத்திரம் அடைந்த மெரிகோ இணையதளத்தில் கொலை செய்வது எப்படி? மற்றும் குற்றம் செய்ய 10 குறிப்புகள் ஆகிவற்றைப் படித்துள்ளார்.

இதயைடுத்து லிண்டாவின் வீட்டிற்கு சென்று அவரை குறைந்தது 100 தடவை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் நடந்தபோது அவர்களின் 2 வயது மகன் அந்த அறையில் தான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மெரிகோவை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். லிண்டாவைக் குத்தியதாக ஒப்புக் கொண்ட அவர் தான் கொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments