Latest News

June 14, 2011

நடிகை அனுஷ்காவிற்கு நடந்தேறிய ரகசிய நிச்சயதார்த்தம்!
by admin - 0


டிகை அனுஷ்காவிற்கும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் கலைவாரிசு நாக சைதன்யாவிற்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்ற பரப்பரப்பு செய்தி தெலுங்குத் திரையுலகை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் காதலிப்பதை ஒப்புக்கொண்ட அனுஷ்கா, தன் காதலிப்பது யாரை என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை. அதற்கான தருணத்தில் அவர் யாரென தெரிவிப்பேன் என்றும் இன்னும் இரண்டு வருடத்தில் திருமணம் செய்துகொள்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.

அனுஷ்கா இவ்வாறு தெரிவிக்கவும் அவரின் காதலர் ‘வானம்’ பட இயக்குநர் கிரீஸ்தான் என்று பத்திரிகை உலகம் பறைசாற்றியது. இந்நிலையில் அனுஷ்காவிற்கும் நடிகர் நாக சைதன்யாவிற்கும் இரு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்து விட்டது என்று செய்தி கசியத் தொடங்கியுள்ளது. மீடியாக்களுக்கு பயந்து இந்த ரகசிய நிச்சயதார்த்தத்தை இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாகத் தெரிவிப்பார்கள் என்றும் டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments