சீனாவில் நாய்களின் உடலில், மைக்ரோசிப் பொருத்தும் பணி துவங்கியுள்ளது.
நவீன உலகில், "மைக்ரோசிப்' இல்லாத பொருட்களே இல்லை. கம்ப்யூட்டரின் மூளை போன்ற இந்த மைக்ரோசிப்கள் மூலம், எல்லா தகவல்களையும் பெற்று விடலாம்.
இப்போது, செல்லப் பிராணிகளின் உடலிலும் இந்த மைக்ரோசிப்களை பொருத்தும் பணி துவங்கி விட்டது. கம்யூனிச நாடான சீனா, இப்போது முதலாளித்துவ நாடுகளுக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆடம்பர கார்கள்,சொகுசு பங்களாக்கள் என, வாழ்க்கை முறையை மாற்றி வருகின்றனர் மக்கள்.
புதிய செல்வந்தர்கள் அனைவரும், வீடுகளில் நாய் வளர்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த நாய்கள் அடிக்கடி காணாமல் போய் விடுகின்றன. பின்னர், இந்த நாய்களை தேடி கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படு கின்றனர். நாய்களை கண்காணிக்கும் உள்ளாட்சி அமைப்புகளும், நாய்களைப் பற்றிய தகவல்களை பராமரிக்க திணறுகின்றன. இந்த சிக்கல்களைப் போக்க, நாய்களின் உடலில் மைக்ரோசிப்களை பொருத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்தனர்.
குவாங்டாங் மாகாணத்தில், குவான்சூ என்ற ஊரில், நாய்களின் உடலில் மைக்ரோசிப் பொருத்தும் பணி முதலில் துவங்கியுள்ளது. நாய்களைப் பற்றிய விபரம், அதன் உரிமையாளர் பெயர், எப்போதெல்லாம் தடுப்பு ஊசிகள் போடப்பட்டன, ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்ததா போன்ற விபரங்கள் அந்த மைக்ரோசிப்பில் இடம் பெறும்.
மைக்ரோசிப்பை வாசிக்கும் கம்ப்யூட்டர் கருவி முன் நாயை நிறுத்தினால் போதும், அந்த நாய் பற்றிய எல்லா விவரங்களும் கம்ப்யூட்டரில் வந்து விடும். இதன் மூலம் காணாமல் போகும் நாய்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். யாரும் நாய்களை திருடியும் விற்க முடியாது. விரைவில் சீனா முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது.

No comments
Post a Comment