Latest News

June 05, 2011

பாபா ராம்தேவ் டெல்லிக்குள் நுழைய 15 நாட்களுக்குத் தடை
by admin - 0

டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் தலைநகர் டெல்லிக்குள் நுழைவதற்கு 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோருடன் இணைந்து ஈடுபட்ட ராம்தேவை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விமானம் மூலம் டேராடூன் அனுப்பி வைத்து விட்டனர். இந்த செயல் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசியும் கலைத்த போலீஸாரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாபா ராம்தேவ் 15 நாட்களுக்கு டெல்லிக்கு வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments