Latest News

May 02, 2011

மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை கொண்டு எழுத்துரு (Font) இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்
by admin - 0

மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை கொண்டு எழுத்துரு (Font)
உருவாக்கியுள்ளனர் ஆங்கிலம் மற்றும் நேபால் என்ற இரண்டு
மொழியின் Fonts தற்போது தறவிரக்கலாம், குஜராத்தி,மராத்தி,தெலுங்கு,
தமிழ், உட்பட நான்கு மொழிகளிலும் விரைவில் கிடைக்க இருக்கிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


அகிம்சையை உலகிற்கு காட்டி அதற்கு முன் உதாரணமாக வாழ்ந்த
இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை
அப்படியே எழுத்துருக்களாக (Fonts) மாற்றி கொடுத்துள்ளனர் இதை
நம் கணினியில் எளிதாக இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.gandhijifont.com/downloadthefont.htm
இத்தளத்திற்கு சென்று நாம் காந்திஜி எழுதிய மொழியில் எந்த மொழி
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து அதை சொடுக்கி நம் கணினியில்
எளிதாக எழுத்துரு (Fonts) ஆக சேமித்து பயன்படுத்தலாம். காந்திஜி
எழுதிய எழுத்துக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த
எழுத்துருக்கள் அழகாக மட்டுமல்ல சத்தியத்தையும் நேர்மையையும்
கொண்டு நிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையாகாது.
உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ விரும்பும் காந்திஜியின்
சீடர்களுக்கு இந்த எழுத்துருக்கள் பயனுள்ளதாக இருக்கும்
« PREV
NEXT »

No comments