![]() |
vivasayi |

"ஒஸ்தி" இதுதான் தரணி இயக்கத்தில் எஸ்.டி.ஆர். அதாங்க சிம்பு நடிக்கும் "தபாங்" இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக் நாமகரணம்! பாலாஜி ரீல் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பாக இப்படத்தை மோகன்ராவ் தயாரிக்கிறார். "ஒஸ்தி" தமிழ் படத்திற்கு இன்று காலை ஏ.வி.எம்., புதிய பிள்ளையார் கோயிலில் பூஜை நடந்தது. முதல்ஷாட் ஷூட் அதைத்தொடர்ந்து மீடியா மீட் என அம்மாம் பெரிய ஸ்டுடியோவே அதகளப்பட்டது.
திரையுலக வி.வி.ஐ.பி.கள் புடைசூழ பிள்ளையார் சிலையின் முன் "ஒஸ்தி" படத்தில் நாயகராக நடிக்கும் எஸ்.டி.ஆருக்கு அவரது அம்மாவாக நடிக்கும் மாஜி நாயகி ரேவதி நெற்றியில் வெற்றி திலகமிடுவது போன்ற முதல் ஷாட்டை ஷூட் செய்துவிட்டு வந்து மீடியா முன் அமர்ந்தது மொத்த யூனிட்டும்! இந்தியி்ல சல்மான்கான் நடித்து 300கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கும் "தபாங்" படத்தை பார்த்துவிட்டு வந்த சிம்பு, இயக்குநர் தரணிக்கு போன் செய்து இந்தப்படத்தை தமிழில் நாம சேர்ந்து பண்ணலாம் என்றாராம். அதற்கு உடனடியாக ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கி இருக்கிறார் தரணி. "ஒஸ்தி"யை "தபாங்" படத்தின் ரீ-மேக் என்பதை விட "தபாங்" படத்தின் அடாப்ட்வெர்ஷன் என்பதுதான் பொருந்தும் என்கிறார் தரணி. காரணம் "ஒக்கடு" தெலுங்கு படத்தின் தமிழ் ரீ-மேக்கான "கில்லி"யையே "ஒக்கடு" தெலுங்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக தந்தோம், நானும் எனது யூனிட்டும். "தபாங்" இந்திபடத்தையும் ஒஸ்தியாக அப்படித்தான் தர இருக்கிறோம் என்கிறார் நம்பிக்கையுடன்."ஒஸ்தி" படத்தில் தரணியுடன் ஒளிப்பதிவாளர் கோபிநாத், கலை இயக்குநர் மணிராஜ் என "கில்லி" யூனிட் மொத்தமும் அப்படியே இருக்க, இசையை மட்டும் "பாய்ஸ்" தமன் கையாள இருக்கிறார். முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக சிம்பு நடிக்க இருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் நடிக்கிறார். சிம்புவின் அம்மாவாக ரேவதியும், சகோதரனாக ஜித்தன் ரமேஷூம் நடிக்க இருக்கிறார்கள். ஒஸ்தியின் மூலம் தபாங் இந்திப்பட நாயகர் சல்மானின் தீவிர ரசிகரான சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., இப்படத்திற்காக கூடிய விரைவில் சல்மான் கானையும் சந்திக்க இருப்பதாக சொல்கிறார்.பாங்" இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக் நாமகரணம்! பாலாஜி ரீல் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பாக இப்படத்தை மோகன்ராவ் தயாரிக்கிறார். "ஒஸ்தி" தமிழ் படத்திற்கு இன்று காலை ஏ.வி.எம்., புதிய பிள்ளையார் கோயிலில் பூஜை நடந்தது. முதல்ஷாட் ஷூட் அதைத்தொடர்ந்து மீடியா மீட் என அம்மாம் பெரிய ஸ்டுடியோவே அதகளப்பட்டது.
திரையுலக வி.வி.ஐ.பி.கள் புடைசூழ பிள்ளையார் சிலையின் முன் "ஒஸ்தி" படத்தில் நாயகராக நடிக்கும் எஸ்.டி.ஆருக்கு அவரது அம்மாவாக நடிக்கும் மாஜி நாயகி ரேவதி நெற்றியில் வெற்றி திலகமிடுவது போன்ற முதல் ஷாட்டை ஷூட் செய்துவிட்டு வந்து மீடியா முன் அமர்ந்தது மொத்த யூனிட்டும்! இந்தியி்ல சல்மான்கான் நடித்து 300கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கும் "தபாங்" படத்தை பார்த்துவிட்டு வந்த சிம்பு, இயக்குநர் தரணிக்கு போன் செய்து இந்தப்படத்தை தமிழில் நாம சேர்ந்து பண்ணலாம் என்றாராம். அதற்கு உடனடியாக ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கி இருக்கிறார் தரணி. "ஒஸ்தி"யை "தபாங்" படத்தின் ரீ-மேக் என்பதை விட "தபாங்" படத்தின் அடாப்ட்வெர்ஷன் என்பதுதான் பொருந்தும் என்கிறார் தரணி. காரணம் "ஒக்கடு" தெலுங்கு படத்தின் தமிழ் ரீ-மேக்கான "கில்லி"யையே "ஒக்கடு" தெலுங்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக தந்தோம், நானும் எனது யூனிட்டும். "தபாங்" இந்திபடத்தையும் ஒஸ்தியாக அப்படித்தான் தர இருக்கிறோம் என்கிறார் நம்பிக்கையுடன்.
"ஒஸ்தி" படத்தில் தரணியுடன் ஒளிப்பதிவாளர் கோபிநாத், கலை இயக்குநர் மணிராஜ் என "கில்லி" யூனிட் மொத்தமும் அப்படியே இருக்க, இசையை மட்டும் "பாய்ஸ்" தமன் கையாள இருக்கிறார். முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக சிம்பு நடிக்க இருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் நடிக்கிறார். சிம்புவின் அம்மாவாக ரேவதியும், சகோதரனாக ஜித்தன் ரமேஷூம் நடிக்க இருக்கிறார்கள். ஒஸ்தியின் மூலம் தபாங் இந்திப்பட நாயகர் சல்மானின் தீவிர ரசிகரான சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., இப்படத்திற்காக கூடிய விரைவில் சல்மான் கானையும் சந்திக்க இருப்பதாக சொல்கிறார்.www.vivasayi.tk
No comments
Post a Comment