அழிந்து விட்டதாக கருதப்படும் பிரம்மாண்ட வகை உயிரினமான டைனோசரின் புதிய இனம் ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிழக்கு சாங்டாங் பகுதியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த எலும்புகளை கண்டெடுத்துள்ளனர்.
இதற்கும் டைரன்னோசரஸ் ரெக்ஸ் இனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மேல் தாடை எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டினை ஜூசங் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டைசோனரின் மண்டை ஓடு உட்பட 7 ஆயிரம் கிலோ எடையுள்ள எலும்புகள் கிடைத்துள்ளன. இவை சுமார் 11 மீற்றர் நீளமும், 4 மீற்றர் உயரமும் உடையது.
உலகிலேயே சீனாவின் சுசியாங் பகுதியில் தான் அதிக அளவில் டைனோசரின் எலும்புகள் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment