Latest News

May 07, 2011

ஓரே பிரசவத்தில் ஐந்து குட்டிகளை ஈன்ற வெள்ளைப் புலி!
by admin - 0

விசாகப்பட்டினம் இந்திரா காந்தி மிருக காட்சி சாலையில் உள்ள வெள்ளைப்புலி குமாரி, ஒரே பிரசவத்தில் ஐந்து குட்டிகளை ஈன்றது.மூன்றாண்டுகளுக்கு முன், இந்தப் புலி, ஒரே பிரசவத்தில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. கடந்த மாதம், இந்த புலி ஐந்து குட்டிகளை ஈன்று, பார்வையாளர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
மூன்றுக்கும் அதிகமான குட்டிகளை ஈன்றால், குட்டிகள் எடை குறைந்து, பலவீனமாக இருக்கும். ஆனால், தற்போது இந்த வெள்ளைப்புலி இரண்டாவது பிரசவத்தில், குட்டிகளை ஈன்றுள்ள நிலையிலும், அவை அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளதாக மிருக காட்சி சாலையின் டாக்டர் சீனிவாஸ், அதிகாரி ராமலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments