Latest News

May 24, 2011

ஊட்டச்சத்து பற்றாக்குறைகளைக் கண்டறியும் கணினி மென்பொருள்
by admin - 0

வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளைக் கண்டறிய இக்கணினி மென்பொருளானது மண் மற்றும் வேளாண்மை வேதியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் 2004-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழிக்கேற்ப பயிர்கள் மண்ணின் ஊட்டச்சத்து நிலையை எடுத்துரைக்கும் காட்டிகளாக செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது.
பயிர்களில் வெளிப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஊட்டச்சத்துக்களின் பரவும் தன்மை மற்றும் பயிர்வினை நிகழ்வுகளைப் பொறுத்து தனித்தன்மை வாய்ந்ததாகவும் மேலும் பூச்சி, நோய் தாக்குதலால் ஏற்படும் அறிகுறிகளிலிருந்து பிரித்தறியப்படக் கூடியதாகவும் உள்ளது. 
இந்த மென்பொருள், பயிர்களிலுள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள், பற்றாக்குறை அறிகுறிகளை விளக்கும் விளக்க உரைகள், நிவர்த்தி செய்யும் பரிந்துரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்களுடைய பயிர்களில் தோன்றும் பற்றாக்குறை அறிகுறிகளை விளக்கி அதன்பின் எந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் அவ்வாறான அறிகுறிகள் தோன்றியது, அதற்கான பரிந்துரைகள் ஆகியவற்றைப் பெறவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. கேள்விகளை கணினிக்கு செலுத்தியபின் கணினியானது விளக்கத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருள் குறுந்தகடுகளில் கிடைக்கிறது.
பயன்கள்: கணினி துணையுடன் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளை கண்டறிய முடியும். நிவர்த்தி முறைகளை சரியான சமயத்தில் மேற்கொள்ள இயலும். தானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள், பருத்தி, கரும்பு, பழங்கள், காய்கறிகள், பூச்செடிகள் போன்ற பல்வேறு பயிர்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மென்பொருளானது விவசாயிகள், வேளாண் விரிவாக்க அலுவலர்கள், வேளாண் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பயன்படும் வகையில் கலந்துரையாடும் முறையில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: பேராசிரியர் கே.எஸ். சுப்பிரமணியன், த.நா.வே.ப., கோயம்புத்தூர், 98940 65449.  -கே.சத்தியபிரபா, 96591 08780.



« PREV
NEXT »

No comments