Latest News

May 11, 2011

பின்லேடனின் மகன்மாரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
by admin - 0

பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டின் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலின் போது அங்கிருந்த பின்லேடனின் மகன்மாரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பின்லேடனின் கடைசி மகனான 19 வயதான ஹம்ஸா என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவர் பயங்கரவாதத்தின் இளவரசர் என்று வர்ணிக்கப்படுபவர். 

அமெரிக்கத் தாக்குதலின் பின்லேடனின் மூன்று மனைவிமாரும் பல பிள்ளைகளும் தற்போது பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர். 

ஆனால் அந்த வீட்டில் இருந்த பின்லேடன் குடும்பத்தின் முக்கிய நபரான ஹம்ஸா அங்கிருந்து தப்பியுள்ளார் என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது. 

ஹம்ஸாவுக்கு 14 வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 

நீங்கள் இங்கு காண்பதும் அதே படம் தான். பின்லேடனின் மனைவிமாரை பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்த போது தான் ஹம்ஸா பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பின்லேடனின் 22 வயதான காலித் என்ற மகன் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 



அல்குவைதா இயக்கத்தின் அடுத்த தலைவர் யார்? 


பின்லேடன் மரணமடைந்த பிறகு அல்குவைதா இயக்கத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி இப்போது பரவலாக எழுந்துள்ளது. 

அடுத்த தலைமைத்துவத்துக்காக அய்மான் அல் சவாஹிரி, அபூயஹ்யா அல் லிபி, சைப் அல் ஆதல், அன்வர் அல் அவ்லாக்கி, காத் பின் லாதன், நாஸர் அல் வஹைஸி, இல்யாஸ் காஷ்மீரி, ஆகிய ஏழு பேருக்கிடையில் போட்டி நிலவுகின்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் வீரர் இல்யாஸ் காஷ்மீரியே இந்தப் போட்டியில் முன்னணியில் இருப்பதாகவும் அல்குவைதா தகவல்கள் தெரிவிக்கின்றன. 



மும்பாய் பாணியிலான பல தாக்குதல்களை ஐரோப்பிய நகரங்கள் பலவற்றில் நடத்துவதற்கு இவர் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதால் இவரின் செல்வாக்கு அல்குவைதா அமைப்புக்குள் ஓங்கியுள்ளது. இதுவரை ஐரோப்பிய நகரங்களில் இடம்பெற்றுள்ள அல்குவைதா தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும் இவரேயாவார். 

அல்குவைதா அமைப்புக்குள் பின் லாடனுக்கு அடுத்தபடியாக இருந்தவர் அய்மான் அல் சவாஹிரி. பின்லாடன் உயிருடன் இருந்தபோதே இவர் இரண்டாம் நிலையில் இருந்தாலும் அநேகமான அல்குவைதா உறுப்பினர்கள் மத்தியில் இவருக்குப் போதிய செல்வாக்கு இல்லையென்றே தெரியவந்துள்ளது. 



அமெரிக்காவின் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் பாகிஸ்தானில் பல தடவைகள் காஷ்மீரியை இலக்கு வைத்த போதிலும் அவர் தப்பியுள்ளார். பாகிஸ்தானில் அடுத்தவாரம் ஆரம்பமாகும் மிகப்பெரிய பயங்கரவாத வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடிய முஜாஹிதீன் கொரில்லாக்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பாகிஸ்தானின் விஷேட கமாண்டோ படையின் முன்னாள் வீரரே இவர் என்பது குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments