Latest News

May 21, 2011

இன்னும் இரண்டு மாதத்தில் மினி சைலோ அறிமுகம்: மஹிந்திரா
by admin - 0

மும்பை: சிறிய கார் செக்மென்ட்டை குறிவைத்து, தனது பிரபல மாடலான சைலோவின் பேஸ் மாடலில் உருவாக்கப்பட்டுள்ள மினி சைலோவை விரைவில் களமிறக்குகிறது மஹிந்திரா.

இதற்காக, மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள தனது புதிய தொழிற்சாலையில் மினி சைலோவின் உற்பத்தியையும் சோதனை முறையில் துவங்கியுள்ளது மஹிந்திரா. அடுத்த இரண்டு மாதங்களில் மினி சைலோ சந்தையில் காலடி எடுத்து வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சைலோவின் வடிவம் சிறிய கார்களின் அளவை ஒத்து இருக்கும் என்பதாலும், ரூ.5 லட்சம் விலையில் வர இருப்பதாலும், தினசரி அலுவலகம் செல்வதற்கும் மற்றும் வெளியூர் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஜேஜுரிகார் கூறுகையில்,"மினி சைலோவை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். மினி சைலோ நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும்," என்றார்.

Hot Wheels 10 Car Pack (Styles May Vary)
« PREV
NEXT »

No comments