Latest News

May 10, 2011

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!
by admin - 0


நயன்தாரா - பிரபுதேவா திருமணம் நடந்தால் பார்க்கலாம் என்று நடிகர் சிம்பு கூறியிருப்பது, அவர்கள் திருமணத்தில் புதிய சிக்கல் ஏதும் இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் ஒஸ்தி. இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த சிம்பு, நிருபர்களின் கேள்விகளுக்கு ‌ரொம்பவே கூலாக பதில் அளித்தார்.
திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, எனது தங்கை திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அது முடிந்த பின்னர்தான் என் கல்யாணம் பற்றி யோசிக்க வேண்டும். கண்டிப்பாக என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். எனக்கு ஏற்ற பெண்ணாக அமைந்தால் உடனடியாக கல்யாணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன், என்றார்.
நயன்தாராவும், பிரபு தேவாவும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாமே? என்ற கேள்விக்கு, நானும் பத்திரிகைகளில் படித்தேன். கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்றார். நடிகர் சிம்பு இப்படி கூறியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா - பிரபுதேவா கல்யாணத்தில் ஏதும் சிக்கல் உருவாகுமோ என்ற ‌பேச்சும் எழுந்துள்ளது.
« PREV
NEXT »

No comments